வாகனங்களின் விலை இறக்குமதியின் போது சேவை வரி விதிப்பால் மேலும் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்தார்.
வாகன இறக்குமதி தடையை தற்போதைய வரவு செலவு திட்டம் 2022 வரையில் வைத்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் வாகனம் வாங்குவதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர்.
இவ் இக்கட்டான சூழலில் வாகன இறக்குமதிக்கான சேவை வரி விதிப்புக்களை அதிகமாக விதிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
#SriLankaNews