திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை!

image 2c8a8047e8

திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்தத் திட்டமற்ற வாகன இறக்குமதியால், அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் பேருந்துகளின் எரிபொருள் செலவு உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, ஒரு நாளைக்கு இயக்கப்படும் பயணங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையின் விளைவாக, பேருந்து உரிமையாளர்கள் தொழிலில் இருந்து வெளியேறி வருகின்றனர் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Exit mobile version