இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் கேள்வியின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்குள், இலங்கையர்கள் வாகன இறக்குமதிக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது, ஏற்கனவே மத்திய வங்கியால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பில்லியன் டொலரை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையில், வாகன இறக்குமதி வரிகளைக் கொண்டு இந்தமுறை, பாதீட்டுப் பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

