images 14 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியால் காய்கறி விலைகள் கடும் உயர்வு: பச்சை மிளகாய் கிலோ ரூ. 2000-ஐத் தாண்டியது!

Share

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் காய்கறி சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹட்டன் உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் காய்கறிகளின் விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழ​மை (28) அன்று, உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய், மூட்டைக்கொச்சிக்காய் ரூ. 2000 சில்லறை விலையில் விற்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஒரு கிலோ கிராம் கறிக்கொச்சிக்காய் ரூ. 1300க்கு விற்கப்பட்டது.

ஒரு கிலோ கிராம் போஞ்சி ரூ. 800க்கும், ஒரு கிலோ சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 700க்கும்மை அனைத்து வகையான தாழ்நில காய்கறிகளும் ரூ. 600-800க்கும், ஒரு கிலோ கிராம் தக்காளி ரூ. 800க்கும் விற்கப்படுகின்றன.

இதற்கிடையில், நுவரெலியா பொருளாதார மையம் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ கிராம் முட்டைக்கோஸை ரூ. 210க்கும், கேரட் ரூ. 200க்கும், லீக்ஸ் ரூ. 240க்கும், முள்ளங்கி ரூ. 150க்கும், பீட்ரூட் ரூ. 180க்கும், பீட்ரூட்/வெட்டல் ரூ. 500க்கும், உருளைக்கிழங்கு – ரூ. 270 க்கும், சிவப்பு உருளைக்கிழங்கு – ரூ. 280க்கும், நோகோல் – ரூ. 250க்கும் கொள்வனவு செய்கின்றது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...