காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

23 657a8557d51bd md

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச் சந்தைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தரவுகளை இலங்கை மத்திய வங்கி தனது அன்றாட விலைப்பட்டியல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் பச்சை மிளகாயின் விலை 1,000 ரூபாயைத் தாண்டியுள்ளதோடு, தக்காளி விலை 600 ரூபாயை தாண்டியுள்ளது. ப்ரோக்கோலி 1,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.

இந்தத் தரவுகள் அனைத்தும் மத்திய வங்கியின் அன்றாட விலைப்பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நுகர்வோர் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை ஏற்றம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

 

Exit mobile version