வலிதென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரான ஜிப்ரிக்கோ இளவாலை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் வலிகாமம் பிரதேசத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வலி தென்மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ஜோன் ஜிப்ரிக்கோ அவர்களுடைய வீட்டின் மீது ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருடைய ஆதரவாளர் என தெரிவிக்கப்படுபவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது .
இதில் குறித்த பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் காயமடைந்தார். இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பான வழக்கு போடப்பட்டது .
குறித்த சந்தேக நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் தன்னை குறித்த பிரதேச சபை உறுப்பினரும் அவரது குடும்பத்தினரும் தாக்கியதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .
இதனையடுத்து நேற்றைய தினம் மாலை குறித்த பிரதேச சபை உறுப்பினர் வீட்டுக்குச் சென்ற போலீசார் குறித்த பிரதேச சபை உறுப்பினரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று தாக்கி உள்ளனர்.
இதில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் பலத்த தாக்குதலுக்கு உள்ளானது டன் உறுப்பினரின் சகோதரியும் தாக்குதலுக்குள்ளானார்.
இதனை அடுத்து குறித்த பிரதேச சபை உறுப்பினருடைய தங்கை மயக்கமடைந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் எந்த ஒரு முதலுதவி சிகிச்சைகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த பிரதேசசபை உறுப்பினரின் நண்பர்களால் 1990 அம்புலன்ஸ் சேவையின் மூலம் குறித்த இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது காயமடைந்த குறித்து ஏனைய குடும்பத்தினரையும் போலீசார் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர் .
இதன்பின் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் தாய் மாமா மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது மூவரையும் தலா 100000 ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
#SrilankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment