ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தனவுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கின்போது, லஞ்ச ஒழிப்பு ஆணையம் (Bribery Commission) குறித்த தலைப்பில் அரசியல்வாதிகள் குழு ஒன்று விவாதித்துக் கொண்டிருந்தபோதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை குறித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட வஜிர அபேவர்தன, தனக்கும் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடமிருந்து அழைப்பு வந்ததாகவும், விசாரணையின்போது தனக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூறியபோது அதிகாரிகள் ஆச்சரியப்பட்டதாகவும் கூறினார்.
இதற்கான காரணத்தைக் கேட்டபோது, “எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், நீங்கள் அதை ஒரு பிரச்சினையாக மாற்றக்கூடாது” என்று பதிலளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வஜிர அபேவர்தனவின் இந்தக் கூற்றைக் கேட்டு அவரைச் சுற்றியிருந்த பலர் சிரித்துள்ளதுடன், “நாடாளுமன்ற உறுப்பினர் வஜிரவுக்கு உண்மையில் வங்கிக் கணக்கு இல்லையா?” என்று கேட்டுள்ளனர். அதற்கு வந்த பதில் “உண்மையில் இல்லை” என்பதேயாகும்.