ஸ்டிக்கர் வடிவிலான தடுப்பூசிகளை அமெரிக்காவின் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில்,
”தாம் கண்டுபிடித்த ஸ்ரிக்கர் வடிவிலான தடுப்பூசி சிறப்பாக செயற்படுகின்றது.
இது மருத்துவத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும், இனிமேல் ஊசியைக் கண்டு பயப்படுவோர், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த ஸ்ரிக்கர் வடிவிலான தடுப்பூசி வரப்பிரசாதமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதில் எமது கண்ணுக்கு புலப்படாத வகையில் 5 ஆயிரம் நுன் ஊசிகள் உள்ளன.
இதனை எமது தோள்பட்டையில் ஒட்டும்போது எமக்கு வலி எதுவும் தெரியாது.
இந்த நுண் ஊசிகள் மூலம் தடுப்பு। மருந்து எமது உடலுக்கு இலகுவாக செலுத்தப்படும்.
இந்த ஸ்ரிக்கர் வடிவிலான ஊசியை எமது உடலில் ஒட்டும்போது உடலில் லேசாக கிள்ளும்போது ஏற்படுகின்ற அதே உணர்வு மட்டுமே ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
#World