தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை – பிரித்தானியா

download 1 13

Govshield

பிரித்தானியாவிற்குச் செல்லும் கொவிசீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இந்தியர்கள், அங்கு தம்மைத் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தத் தேவையில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல், தினமும் உயர்வடைந்து வருகிறது.

இந்நிலையில், அண்மையில் பிரித்தானியாவால் கொவிசீல்ட் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டிருந்தது. எனினும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருந்த இந்தியர்கள், பிரித்தானியாவிற்குச் சென்ற நிலையிலும், அங்கு 10 நாட்களுக்குக் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது, கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இந்தியர்களே இவ்வாறு தம்மைத் தனிமைப்படுத்தத் தேவையில்லை என, இந்தியாவிற்கான பிரித்தானியாத் தூதுவர் அலெக்ஸ் எல்லிஸ் அறிவித்துள்ளார்.

Exit mobile version