ஈரான் அதிபருக்கு எதிராக, வழக்குத் தொடருமாறு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!

fh

usa

ஈரானில் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வாசிங்டனில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், இப்ராஹிம் ரெய்சி எவ்வளவு கொடுமையானவர் என்பதை இங்குள்ளவர்கள் உணர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஈரானில் 30 ஆயிரம் அரசியல் கைதிகள் தூக்கிலிடுவதற்கு ரெய்சியும் ஒரு காரணமானவர் என்று குறிப்பிட்ட மைக் பென்ஸ், அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாம் கொடுமையானவர்கள் முன்னால் அமைதியாக இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்ட நிலையில், அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

#world

Exit mobile version