தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களிடம் சில திறமைகள் இல்லை என்றும், அவர்கள் அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, இந்த ஆண்டு தொடக்கத்தில் H-1B விசா விண்ணப்பங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் 100,000 டொலர் விண்ணப்பக் கட்டணத்தை விதித்த பின்னரே வெளியாகியுள்ளது.
புதிய கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தற்போது அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
H-1B விசா முறையை அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து அதிகத் திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்குப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.