images 10 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் முகமூடி கிழிந்துவிட்டது: வெனிசுலா ஆக்கிரமிப்பு குறித்து ரவூப் ஹக்கீம் கடும் கண்டனம்!

Share

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவ ஊடுருவல் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது ஆகியவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சர்வதேசச் சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறி, ஒரு நாட்டின் இறையாண்மையைப் பலவந்தமாகப் பறிக்கவோ அல்லது ஆட்சி மாற்றத்தை (Regime Change) ஏற்படுத்தவோ எந்தவொரு வல்லரசுக்கும் உரிமையில்லை.

அமெரிக்காவின் தற்போதைய டிரம்ப் நிர்வாகம், பிற நாடுகளின் இயற்கை வளங்கள் மீது கொண்டுள்ள பேராசையினால் இவ்வாறான ‘சாகசப்போக்கு’ நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இது சர்வதேச அமைதிக்கு விடப்பட்ட சவால் என அவர் சாடியுள்ளார்.

இயற்கை வளங்களின் மீதான முழு இறையாண்மையும் அந்தந்த நாடுகளுக்கே உரியது. ஆனால், அமெரிக்கா தனது சுயநல புவியியல் மற்றும் அரசியல் இலக்குகளுக்காக உலக ஒழுங்கை நிலைகுலையச் செய்கிறது.

இவ்வாறான ஒருதலைப்பட்சமான அத்துமீறல்கள் தடையின்றித் தொடருமானால், அது மனிதகுலத்தை மற்றொரு உலகப்போரை நோக்கித் தள்ளிவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோதல்களைத் தீர்க்கப் பரஸ்பரக் கலந்துரையாடல்களும் ஒத்துழைப்புமே ஒரே வழி எனத் தெரிவித்துள்ள அவர், பலவீனமான நாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறைகளைச் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...