images 4 2
செய்திகள்உலகம்

எச்1பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி;அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

Share

அமெரிக்காவின் பிரபலப் பொருளாதார நிபுணர் டேவ் பிராட் (Dave Brat), எச்1பி (H-1B) விசா திட்டத்தில் இந்தியாவில் பெருமளவு மோசடி நடந்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

டேவ் பிராட் இது தொடர்பாகக் கூறியதாவது “இந்தியா முழுவதும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மொத்த எச்1பி விசாக்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.”

“சென்னைக்கு 220,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், எச்1பி விசாக்களின் உச்சவரம்பு 85,000 மட்டுமே. அது நிர்ணயித்த வரம்பை விட 2.5 மடங்கு அதிகம். எச்1பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி நடந்துள்ளது. இந்தியாவில் எச்1பி விசா திட்டத்தில் 80 முதல் 90 சதவீதம் போலியானவை.”

“71 சதவீத எச்1பி விசாக்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. 12 சதவீதம் பேர் மட்டுமே சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வருகின்றனர். அங்கே ஏதோ நடக்கிறது என்பதை இது காட்டுகிறது.”

இந்தப் பிரச்சினை அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது என்றும் டேவ் பிராட் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...