பாடசாலை மீது தாக்குதல் – 70 பேர் வரையில் பலி!!!

1641804297367

மேற்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பாடசாலை மீது இராணுவத்தினர் நடாத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உள்ளடங்கலாக 70க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதியோப்பிய அரச படைகளுக்கும், டைக்ரே பிராந்தியத்தை சேர்ந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இந்த சூழலில், டைக்ரே பிராந்தியத்தில் போராட்டக்காரர்களை குறிவைத்து அடிக்கடி ராணுவத்தால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஏராளாமான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். மேலும் உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#World

 

Exit mobile version