அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிறைவேற்றுக் குழு அனுமதி தெரிவித்துள்ளது.
முன்னதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பல எதிர்க்கட்சிகள் இந்தக் பேரணியில் இணைவதாகவும், இது அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நினைவூட்டும் நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுடன், இந்தப் பேரணி மேலும் பலமான எதிர்க்கட்சிகளின் கூட்டணியைக் கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.