இலங்கையில் உள்நாட்டுப் போரின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் (Conflict-Related Sexual Violence) பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) கவலை வெளியிட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட ஐநாவின் விசேட ஆய்வறிக்கையில் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் நீண்டகாலமாக நீதி மறுக்கப்பட்டு வருகின்றது. 2009-ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதியில், அரச படைகளாலும் இராணுவத்தினராலும் இத்தகைய வன்முறைகள் பரவலாக நிகழ்த்தப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
பாதிக்கப்பட்ட சமூகத்தினர் சமூக அவமானம், பயம் மற்றும் குற்றவாளிகளால் ஏற்படக்கூடிய பழிவாங்கல்களுக்கு அஞ்சுவதாலேயே முறைப்பாடுகளைச் செய்யத் தயங்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர்கள் இன்றும் நாட்பட்ட உடல் காயங்கள், மலட்டுத்தன்மை, உளவியல் முறிவுகள் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டவும், உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேம்படுத்தவும் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் நீண்டகாலமாக முன்வைத்து வரும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, தற்போதைய அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

