images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

Share

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை அனுமதிக்கும் திட்டத்தை சோதனை முறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டம் விரைவில் பல விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மான்செஸ்டர் விமான நிலையத்தில், பிரித்தானியர்கள் கடவுச்சீட்டு இல்லாமலேயே நுழையும் திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

பயணிகள் மின்னணு நுழைவாயில் வழியாக விமான நிலையத்துக்குள் நுழையும்போது, செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள கருவிகள் அவர்களுடைய முகங்களை ஸ்கேன் செய்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களை விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கும்.

இதன் மூலம், பிரித்தானியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பும்போது, கடவுச்சீட்டைச் சோதனை செய்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்காது.

ஆகவே, அவர்கள் தங்கள் கடவுச்சீட்டை,சோதனையிடுவதற்காக வரிசையில் காத்திருக்கவேண்டியதில்லை.

பிரித்தானியர்களுக்கு நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள இந்த திட்டத்தை அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கும் அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...