லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) ஒப்புதல் அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தூதரகம் சீனாவுடனான வர்த்தக மற்றும் அரசியல் தொடர்புகளை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள போதிலும், சீனா உளவு பார்ப்பது குறித்த தொடர்ச்சியான கவலைகள் மற்றும் இங்கிலாந்து தேசிய பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இங்கிலாந்துப் பாதுகாப்பு அமைப்பான MI5 எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
MI5 உளவுத்துறை எச்சரிக்கைகளை மீறியும், பொருளாதார மற்றும் இராஜதந்திர நலன்களை முன்னிலைப்படுத்தி, லண்டன் நகரில் ஒரு பெரிய வளாகத்தில் இந்தத் தூதரகத்தை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.