டித்வா பேரழிவில் இருந்து மீள இலங்கைக்கு பிரித்தானியா அவசர நிவாரண நிதி உதவி!

articles2FrDVWgfzZnKKLShSLrBUZ

டித்வா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாரிய பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக, பிரித்தானிய அரசாங்கமும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, 890,000 அமெரிக்க டாலர் (USD) அவசர நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross), ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு (UN Agencies in Sri Lanka) மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் (British High Commission) தெரிவித்துள்ளது.

Exit mobile version