போர் தளபாடங்களை கைவிட்டு வெளியேறின அமெரிக்க படைகள்!!!

போர் தளபாடங்களை கைவிட்டு வெளியேறின அமெரிக்க படைகள்!!!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன.

ஆப்கானித்தானை தலிபான் படைகள் கடந்த 15 ஆம் திகதியன்று கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து அமெரிக்க படைகள் ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் முழுமையாக வெளியேறிவிடும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே அமெரிக்க படைகள் தற்போது முழுமையாக வெளியேறியுள்ளன. அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர், காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தமக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் ஏவுகணை அழிப்பு அமைப்புகள் உட்பட மொத்தம் 73 வாகனங்களை இனி பயன்படுத்த முடியாதபடி செயலிழக்கச் செய்துள்ளன.

அமெரிக்க மத்திய படைகளின் தலைவர் ஜெனரல் கென்னத் மெக்கன்சி இது தொடர்பில் கூறுகையில்,
“ஹமீது கர்சாய் விமான நிலையத்தில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த எமது விமானங்கள், போர் வாகனங்கள் ஆகியவை உட்பட 73 வாகனங்களை செயலிழக்கச் செய்துள்ளோம். அங்குள்ள போர் தளபாடங்களை எவராலும் இனி பயன்படுத்த முடியாது.

அத்துடன், C-RAM system எனப்படும் ராக்கெட்டுகள், பீரங்கிக் குண்டுகளை இடைமறிக்கும் சக்தி கொண்ட வாகனம் ஆகியவற்றையும் அங்கேயே விட்டுவந்துள்ளோம். சிரேம் சிஸ்டம் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டது. நாங்கள் வெளியேறும் கடைசி நிமிடம் வரை C-RAM system இயங்கும் நிலையில் இருந்தது” என தெரிவித்துள்ளார்.

ame

Exit mobile version