யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 5.05 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று, நாவற்குழி பகுதியில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதன்போது வீதியை விட்டு விலகிய வாகனம், அருகிலிருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
உயிரிழந்த இருவரும் கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் அதிவேகப் பயணம் ஆகிய கோணங்களில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாவற்குழி பகுதியில் அதிகாலை வேளைகளில் இவ்வாறான மணல் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

