இனம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு – யாழில் பரபரப்பு

ffbd4b75 dead

யாழ்பாணம் – பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சடலங்கள் 40 தொடக்கம் 50 வயதுடைய நபர்களாக இருக்கலாம் எனவும்  இவர்கள் 2-3 நாட்களுக்கு முன்னராகவே இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version