அம்பலாங்கொட தேவாலய நிர்வாக சபைத்தலைவர் கொலை: 2 சந்தேகநபர்கள் கைது!

MediaFile 20

அம்பலாங்கொட மோதர தேவாலயத்தின் (Modara Church) நிர்வாக சபைத்தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபரும், அவர் மறைந்திருப்பதற்கு உதவிய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 30 வயதுடைய மீட்டியாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அவர் மறைந்திருக்க உதவிய நபர் 44 வயதுடைய செல்லக்கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காலி குற்ற விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Exit mobile version