இன்று அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து மில்லனிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. கார் வீதியை விட்டு விலகியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த காரில் பயணித்த நால்வரில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
படுகாயமடைந்த தாயும் மற்றுமொரு மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
#SriLankaNews
Leave a comment