எம்பிலிப்பிட்டிய கதுருகசார திறந்த வெளிச் சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர் .
எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
மாத்தறை நீதிமன்றத்தில் திருடிய குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 28 வயதான கைதியொருவரும், 30 மில்லிகிராம் போதைப்பொருள் வைத்திருத்தமைக்காக கொழும்பு நீதிமன்றத்தால் ரூ .6,000 அபராதம் விதிக்கப்பட்டு அபராதப் பணத்தினை செலுத்த முடியாது சிறைத் தண்டனை அனுபவித்த 36 வயதான நபரொருவருமே சிறையிலிருந்து தப்பியோடியுள்ளனர் .
இந்நிலையில் இவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .