15 1
இந்தியாசெய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம்! வெளியான தகவல்

Share

கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘வய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்குகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது.

இதுதொடர்பாக முறைபாடு எழுந்த நிலையில், விஜயின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 1
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதை பொருள் கடத்தலில் ஜே.வி.பிக்கும் தொடர்பு! அதிர்ச்சி கொடுத்த விமல் வீரவன்ச

தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க...

17 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது...

16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள்....

14 1
இலங்கைசெய்திகள்

நவம்பர் மாதம் முதல் நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்! வெளியான வர்த்தமானி

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பொருட்கள் கொள்வனவின்போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுத்து, வர்த்தமானி...