vijai
செய்திகள்இந்தியா

ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

Share

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், ஆளும் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் போர்க்கொடி தூக்கியுள்ளார். வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இந்தத் தேர்தல் ஊழல், லஞ்சம் மற்றும் நிர்வாகத் திறமையற்ற ஸ்டாலின் ஆட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் போர். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் நேரடிப் போர்,” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

திமுகவின் தலைமையிலான கூட்டணியை ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என வர்ணித்த விஜய், முதல்வர் ஸ்டாலினை ‘சூப்பர் ஸ்டாண்ட்-அப் கொமெடியன்’ என விமர்சித்தார். “தமிழ்நாடு ஒருகாலத்தில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற பெருந்தலைவர்களால் வழிநடத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது; ஆனால் இன்று அது கேலிக்குரிய மாநிலமாக மாறிவிட்டது,” என்று சாடினார். மேலும், டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் என முதல்வர் கூறுவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முழக்கமே தவிர, சட்டமன்றத் தேர்தலுக்கு அல்ல என்றும், தவெக-வின் உண்மையான எதிரி திமுக மட்டுமே என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம், “யாரும் எங்களை விலைக்கு வாங்க முடியாது, யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்” என்ற உறுதிமொழியை விஜய் ஏற்க வைத்தார். “தமிழகம்தான் விஜய், விஜய்தான் தமிழகம். நாமும் மக்களும் உடலும் உயிரும் போன்றவர்கள்,” எனக் குறிப்பிட்ட அவர், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வந்து மக்களைச் சந்திப்பதாக வாக்குறுதி அளித்தார். திமுக எனும் தீய சக்தியை ஒழிக்க ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து ஒரு ‘விசில் புரட்சி’யை ஏற்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...