டோங்காவில் சுனாமி! ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன

sassdc

பசுபிக் நாடான டோங்காவில் கடலுக்கடியிலுள்ள எரிமலை வெடித்ததில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் ஏற்பட்டதில் ஒரு தேவாலயமும் ஏராளமான வீடுகளும் சுனாமி அலைகளால் அடித்துச்செல்லப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.

கடலுக்கடியில் Hunga Tonga-Hunga Haʻapaii எனும் எரிமலை வெடித்ததையடுத்து, பசிபிக்கின் தென் பிராந்தியத்தில் மிகப்பெரும் அதிர்வு பதிவாகியிருந்தது. இந்த எரிமலை அந்த நாட்டின் தலைநகரிலிருந்து 65 Km தூரத்தில் கடலின் உள்ளே அமைந்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பையடுத்து, டோங்கா முழுவதற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி முண்டியடித்துச் சென்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெடித்ததில் வௌியான புகை வானை நோக்கி 20 கிலோமீட்டர் உயரம் வரை செல்வதாக டோங்கா புவிச்சரிதவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

#WorldNews

Exit mobile version