பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதால் ஒமிக்ரோனில் இருந்து நாட்டை பாதுகாக்க இயலாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார நடைமுறைகளையும் வழிகாட்டல்களையும் தற்போது காணப்படும் கொவிட் – 19 சூழலைக் கருத்திற் கொண்டு பின்பற்றுவது கட்டாயம் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமாக விமான நிலையங்களில் அடையாளம் காணப்பட்ட கொவிட் – 19 தொற்றாளர்களுக்கு ஒமிக்ரோன் பிறழ்வை கண்டறிவதற்கான மரபணு சோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews