போதைப்பொருள் வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த கஜ்ஜி முகமது தாரிக் என்ற பொலிஸ் அதிகாரி திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெரோயின் கடத்தல் சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை முள்ளிப்பொத்தானை என்ற இடத்தில் கைது செய்ய முற்படுகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment