accident tiruvarur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திம்புல பத்தனை சந்திப்பில் கோர விபத்து: லொறியுடன் மோதிய பேருந்து பயணிகள் – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

Share

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று (20) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி பேருந்து பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, இன்று காலை 7:00 மணியளவில் திம்புல பத்தனை சந்திப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் ஓய்வெடுப்பதற்காக, வீதியின் எதிர் திசையில் பேருந்தை நிறுத்தியிருந்ததாகத் தெரியவருகிறது.

அச்சமயம், பேருந்தில் பயணித்த இரண்டு பயணிகள் அதன் பின்புறக் கதவு வழியாக கீழே இறங்கி பிரதான வீதிக்கு வந்துள்ளனர். அப்போது, நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியா நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் சிக்கிய இருவரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய பயணி படுகாயமடைந்த நிலையில் உடனடியாக கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திம்புல பத்தனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...