images 10
செய்திகள்இலங்கை

2025-ன் இறுதி நாளில் சோகம்: இலங்கையின் பல்வேறு பகுதிகளில் விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு!

Share

2025 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கோர வீதி விபத்துகளில் சிக்கி குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த இவர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், நிலாவெளி – தெஹிவத்தை வீதியின் மூதூர் – குங்குவெளி சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.அவருடன் பயணித்த ஏனைய இருவர் பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பங்கதெனிய – ஆணமடுவ வீதியின் குமாரகட்டுவ பகுதியில் உந்துருளி ஒன்றும் உழவு வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மேலும், கொழும்பு – பியகம வீதியின் பட்டிய சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற பாரவூர்தி மோதியதில் பின்னால் அமர்ந்து பயணித்த 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்தளம் – குருநாகல் வீதியின் மல்லங்குளம் பகுதியில் உந்துருளி மீது நோயாளர் காவு வண்டி ஒன்று மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
24503320 09012026ayatollahalikhamene
உலகம்செய்திகள்

அகங்கார ஆட்சியாளர்களுக்கு வீழ்ச்சி உறுதி: டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கடும் எச்சரிக்கை!

ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள...

26 696156064e04d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு கரையை நோக்கி நகரும் தாழமுக்கம்: வடக்கு மற்றும் கிழக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் இன்று முல்லைத்தீவு கரையைத் தாண்டும் என வளிமண்டலவியல்...

Douglas Devananda
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை: துப்பாக்கி விவகார வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளரும், முன்னாள்...

26 696207f1e6f15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரிக்கெட் போட்டி முடிந்து திரும்பியபோது விபத்து: மிகிந்தலையில் 5 இளைஞர்கள் படுகாயம்!

அநுராதபுரம் – யாழ்ப்பாணம் (A9) பிரதான வீதியின் மிகிந்தலை பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற...