மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிப் பாலத்திலிருந்து நேற்றிரவு (23) ஆற்றில் பாய்ந்த யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு, தாளங்குடா – சமூர்த்தி வங்கி வீதிப் பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேரம்: இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பாலத்திலிருந்து யுவதி பாய்ந்ததைக் கண்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தேடுதல் நடத்தப்பட்டு, அவரது சடலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்பது குறித்துக் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

