கட்டுநாயக்கவில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: வர்த்தகர் கைது!

image 3d037a514a

வெளிநாட்டு சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தச் சிகரெட் கடத்தல் முறியடிக்கப்பட்டது. சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதி மற்றும் மூன்று பெட்டிகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்து ‘பிளாட்டினம்’ (Platinum) ரகத்தைச் சேர்ந்த 42,000 சிகரெட்டுகள் (210 காட்டூன்கள்) மீட்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகையின் சந்தை மதிப்பு சுமார் 63 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அவிசாவளை, எபலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒரு வர்த்தகர் ஆவார். அவர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

 

Exit mobile version