jhgffrrtuiyioui
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொது இடத்தில் வெற்றிலை எச்சில் துப்பிய மூவருக்கு தண்டம்: முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி!

Share

புதுக்குடியிருப்பு சந்தை வளாகத்தில் மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்த மூவருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மொத்தம் 7,000 ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட சந்தை பகுதியில், பொது சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எச்சில் துப்பிய மூவர் மீது பொது சுகாதாரப் பரிசோதகரால் (PHI) இன்று (வெள்ளிக்கிழமை) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சந்தையில் மீன் வியாபாரம் செய்த ஒருவரும், பொதுமக்கள் இருவருமாவர்.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்டு மீன் வியாபாரிக்கு 5,000 ரூபா ஏனைய இருவருக்கு தலா 1,000 ரூபா வீதம் 2,000 ரூபா தண்டம் விதித்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான சுகாதாரச் சீர்கேடுகளில் ஈடுபடும் பட்சத்தில், அபராதத்துடன் சேர்த்து குறிப்பிட்ட காலத்திற்கு சமூக சேவை (Social Service) செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிமன்றம் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்களில் தூய்மையைப் பேணுமாறும், தொற்றுநோய்கள் பரவுவதைத் தவிர்க்கும் வகையில் பொறுப்புடன் நடக்குமாறும் சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...