பிரித்தானியாவின் இன்வெர்கிளைட் (Inverclyde) பகுதியில் வயல்வெளியில் மனித உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் ஸ்கொட்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிமாகோலம் (Kilmacolm) பகுதியில் உள்ள ஹை மாதர்னாக் பண்ணைக்கு அருகில் உள்ள வயல்வெளியில் இருந்து இந்த மனித உடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட மனித உடலம் தொடர்பான அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், க்ரீனொக் (Greenock) பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போன 50 வயது நபரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 51, 45 மற்றும் 44 வயதுடைய மூன்று பேரை ஸ்கொட்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.