அகில இலங்கை சைவ மகா சபையினரின் திருவெம்பாவை பாதயாத்திரை மட்டுப்படுத்தப்பட்ட சிவனடியார்களைக் கொண்டு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா சூழலை கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களுடன் இப்பாதயாத்திரை 5 மணியளவில் யாழ்ப்பாணம் மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் ஆரம்பமாகி, பொன்னாலையில் அமைந்துள்ள இராவணேஸ்வரர் தலத்தில் நிறைவடைந்தது.
இப் பாதயாத்திரையின் நிறைவில் நாள் காட்டி வெளியீடும், பிடி அரிசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அறநெறி மாணவர்களிடம் பை ஒன்று வழங்கப்பட்டு அதில் கைபிடி அளவு அரிசி சேகரித்து எதிர்வரும் தைப்பூச தினத்தில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்தளித்தலே இப் பிடி அரிசி திட்டம்.
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான இலங்கை தழுவிய சிவபக்தர்களை உள்ளடக்கியவாறு இடம்பெறும் இப் பாதயாத்திரை இம்முறை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews