திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பொலிஸ் உத்தியாகத்தர்களள் பலியாகியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விடுமுறையில் வீடு செல்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் அனுமதி கோரியதாகவும் எனினும் விடுமுறை வழங்க பொறுப்பதிகாரி மறுத்ததன் காரணமாக ஆத்திரமடைந்த குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
எழுந்தமானத்திற்கு மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கடமையில் இருந்த மூன்று உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதுடன் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரிக்க மாவட்ட பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
#SrilankaNews