நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என விமர்சிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
என்னை ஹிட்லர் என்கிறார்கள். பாவம். ஹிட்லரைத் தோற்கடிக்க அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றிணைந்தது போல ஹிட்லரைத் தோற்கடிக்க ரஷ்யாவும், அமெரிக்காவும் இணைந்தது ஒரு வரலாற்றுப் பதிவு, அதனுடன் ஒப்பிடாதீர்கள்.
மக்களுக்கு எதிராக யாரேனும் தவறு இழைத்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாது.
குற்றமிழைத்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும். அதற்கு நீங்கள் என்ன பெயர் வைத்தாலும், என்ன விளக்கம் வழங்கினாலும் சட்டத்தை செயற்படுத்துவோம்.
எந்தப் பதவியில் இருந்தாலும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.