இலங்கைக்கு இலங்கை மின்சார சபைக்கு எதிர்வரும் காலங்களில் போதியளவு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் மின்வெட்டு நடைமுறையில் இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் வரை 500 மெற்றிக் தொன் எரிபொருளை பெற்றுக் கொண்டதை அடுத்து மின்சார சபை எவ்வித இடையூறுமின்றி மின்சாரத்தை வழங்க முடிந்துள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு போதியளவு எரிபொருள் கிடைக்கப் பெற்றதால் திட்டமிட்ட மின்வெட்டு நேற்றையதினம் மேற்கொள்ளப்படவில்லை என மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபைக்கு தற்சமயம் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே அடுத்த சில நாட்களுக்கு எந்தவித இடையூறுமின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
#SrilankaNews