குறைந்த வயதில் நூலாசிரியர் விருதை பெற்றுக் கொண்டுள்ளார் காஸ்மீர் அனந்நாக் மாவட்டத்தின் பன்டெங்கூவை சேர்ந்த 11 வயது அடீபா ரியாஸ் என்பவர்.
குறித்த சிறுமி தற்பொழுது 7 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார். இவர் 11 நாட்களில் 96 பக்கங்களைக் கொண்ட ‘ஜீல் ஒவ் பென்’ என்ற நூலை எழுதி வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த புத்தகம் அமேசன் உட்பட பல தளங்களில் வெளியாகி உள்ளதோடு, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#WorldNews