அமெரிக்காவில் ஆறு கோடியை தொட்டது வைரஸ்!!

image 1

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் ஒட்டுமொத்த பாதிப்பு 6 கோடியைக் கடந்துள்ளதாக ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அளவில் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உருவம் பெற்ற கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.

முதல் அலை, 2-வது அலை என அடுத்தடுத்த தாக்கங்களால் அமெரிக்கா சிக்கி சின்னாபின்னமானது. எனினும் தடுப்பூசி ஏற்றலுக்கு பின் தொற்றின் வேகம் பாதியளவு குறைந்தது.

எனினும் தொற்றின் தாக்கம் குறைவடைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தருவாயில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகமாக தொடங்கியது.

இந்த நிலையில் 2021 ஜனவரி வரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்துள்ளது என்று ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகக் கணிப்பு தெரிவிக்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பினால் இறந்தவர்களில் 20 சதவீதம் பேர் அமெரிக்கா வாசிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்று மாலை நிலவரப்படி ஒட்டுமொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 6கோடியை தாண்டியுள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிஒருவர் தெரிவித்துள்ளார்.

#World

 

Exit mobile version