வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் தொழில்நுட்ப பாட ஆசிரியர் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் மாலை வகுப்புக்கு வராத காரணத்தால் ஆசிரியர் அம்மாணவனை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் கை, கால்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அத்தனகல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மாணவன் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews