தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தலிபான்கள் தடை!

1629285747486

தலிபான் அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு “புதிய மத வழிகாட்டுதல்” என்ற பெயரில் ஓர் சட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் தொலைக்காட்சி  சனல்களில் பெண் நடிகர்கள் இடம்பெறும் நாடகங்கள் மற்றும் விளம்பரங்கள் காட்டப்பட கூடாது எனவும், அவை அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தடை உத்தரவு விதித்துள்ளனர்.

முக்கியமாக, பெண் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் தங்கள் அறிக்கைகளை முன்வைக்கும் போது இஸ்லாமிய ஹிஜாப்களை அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு இது முதல் உத்தரவானபடியால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிகழ்ச்சிகள் சட்டத்தை மீற முடியாது.

மேலும் தலிபான்கள் ஏற்கனவே பல்கழைக்கழகத்திலும் பெண்கள் அணியக்கூடிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் அவை மீறப்பட்டால் தண்டிக்கபடுவர் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆகவேதான், இவைகள் “விதிகள் அல்ல மாறாக ஒரு மத வழிகாட்டுதல்” என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹக்கிப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Exit mobile version