ராஜபக்சக்கள் தமது பெயர் சொல்லும் திட்டங்களை மட்டுமே செய்கிறனர்- சம்பிக்க!!

VideoCapture 20211204 124231 1

யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு,  காலி போன்ற நகரங்களினை போல யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன குறிப்பாக தூர இடங்களுக்கான பேருந்து தரிப்பு நிலையம் யாழ்ப்பாண மாநகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் தற்போது அவ்வாறான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் இந்த அரசினால் நிறுத்தப்பட்டுள்ளன.ஏன் அவ்வாறு செய்கின்றார்களென தெரியவில்லை.

அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறு செய்கின்றார்கள் என நினைக்கின்றேன் ராஜபக்சாக்கள் தமது பெயர் குறிப்பிடப்படும் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே செயற்படுத்துவார்கள் மக்கள் நலன் சார்ந்து செய்யப்பட மாட்டார்கள் என்பதே உண்மை என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version