dog
செய்திகள்உலகம்

உயிரைப் பணயம் வைத்து நாயைக் காப்பாற்றிய நபர் (வீடியோ)

Share

அமெரிக்கா- ஃப்ளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டெய்ல் என்ற கடற்கரையில் கடலில் தத்தளித்த நாய் ஒன்றினை ஜக்கேப் டூடுயிட் என்பவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலுக்குள் குதித்து காப்பாற்றியுள்ளார்.

குறித்த நாய் யாருடையது என்று தெரியாமல் இருந்த நிலையில், அதன் கழுத்தில் இருந்த பெல்ட்டில் அதன் உரிமையாளரின் விபரம் இருந்துள்ளது.

இதனை அவதானித்த ஜக்கேப் அதன் உரிமையாளரிடம் தகவல் கூறியதோடு, உரிமையாளரிடம் நாயை ஒப்படைத்துள்ளார்.

உரிமையாளர் தனது குடும்பத்துடன் நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு, படகில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது,எதிர்பாராத விதமாக நாய்க்குட்டி படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரை திரும்பியவர்கள் வீட்டிற்கு வந்தபிறகும் நாயுக்குட்டி இருக்கிறதா என்பதை கவனிக்கவில்லை. நாய்குட்டியைக் காப்பாற்றியவரின் அழைப்பு வந்த பிறகு உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.

உயிரைப் பணயம் வைத்து நாயைக் காப்பாற்றிய நல்ல உள்ளம் படைத்தவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...