தான் வளர்க்கும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக கிணற்று கட்டில் ஏறி நின்று குழை வெட்டிய சிறுமி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது.
கரணவாய் அண்ணா சிலையடி பகுதியைச் சேர்ந்த 16 வயதான ஜெகன் கனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் பதிவாகியுள்ளது.
தவறி விழுந்த சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிர் பிரிந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#LocalNews