100 பௌத்த தேரர்கள் சகிதம் குஷி நகரில் தரையிறங்கும் முதல் விமானம்!

flight

இந்தியாவின் குஷி நகரிலுள்ள விமான நிலையமானது, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். இலங்கையில் இருந்தே முதல் விமானம் செல்லவுள்ளது. 100 பௌத்த பிக்குகள் அதில் பயணிக்கின்றனர். அமைச்சர் நாமல் ராஜபக்சவும் உடன் செல்கின்றார்.

குறித்த விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்பட்ட பின்னர் அங்கு தரையிறங்கும் முதல் விமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சும் இன்று உறுதிப்படுத்தியது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான சிறந்த உறவுக்கு இதுமேருமொரு எடுத்துக்காட்டாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

Exit mobile version