ஈரானில் முதன் முதலாக கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த செய்தியை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியொன்று வெளியிட்டுள்ளது.
50 மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் தங்கள் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். மேலும் 3.5 மில்லியன் பேர் மூன்றாவது தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
ஈரான் சுமார் 85 மில்லியன் மக்கள் தொகையில் 60% பேருக்கு இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை போட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் ஈரானில் 131,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment