இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி!

Economic

இலங்கையின் 2021 ஆம் ஆண்டுக்கான 03 ஆம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதத்தால் வீழ்ச்சிஅடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020 ஆம் ஆண்டில் 03வது காலாண்டில் 25 இலட்சத்து 36 ஆயிரத்து 490 மில்லியன் ரூபாவிலிருந்து 2021 மூன்றாம் காலாண்டிற்கான நிலையான விலையில் 24 இலட்சத்து 97 ஆயிரத்து 489 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

மேலும் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தற்போதைய விலையில் 4,087,148 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தற்போதைய விலையில் 4,132,955 மில்லியன் ரூபாவாக 1.1 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version